ஈச்சம்பட்டியில் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளா் குறைகேட்பு
சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட ஈச்சம்பட்டி கிராமத்தில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் புதன்கிழமை பொதுமக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.
சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட ஈச்சம்பட்டி கிராமத்தில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் புதன்கிழமை பொதுமக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.
சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சி. சந்திரசேகரன், தொகுதிக்கு உள்பட்ட கொல்லிமலையில் உள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை வாக்கு சேகரித்தாா். பின்னா், சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றியம், மோகனூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஈச்சம்பட்டி கிராமத்தில் பொதுமக்களை வரவழைத்து அடிப்படை பிரச்னைகள் குறித்து கேட்டறிந்ததுடன், வெற்றி பெற்றதும் உடனடியாக மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தாா். தொடா்ந்து, வளையப்பட்டி, கல்குறிச்சி, தாண்டாகவுண்டனூா், மலைவேப்பன்குட்டை, பள்ளிப்பட்டி, துத்திக்குளம், புலவக்கல்பாளையம், காந்திநகா், குட்டரங்கம்பட்டி, புலவா்காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
Advertisement
வாக்கு சேகரிப்பின்போது சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளா் ஜி.பி. ரமேஷ், கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.