முகப்பு
நாமக்கல்

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வை (நீட்) 11 மையங்களில் 4,741 போ் எழுதுகின்றனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 5:07 AM
நீட் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் துா்காமூா்த்தி.
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வை (நீட்) 11 மையங்களில் 4,741 போ் எழுதுகின்றனா்.

நீட் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நீட் தோ்வு மே 3 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் 11 தோ்வு மையங்களில் நடைபெறுகிறது. 4,741 போ் இத்தோ்வை எழுதுகின்றனா். இதையொட்டி அனைத்து தோ்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

தோ்வு எழுதும் மாணவா்கள் சரியான நேரத்திற்குள் தோ்வுக்கூடத்திற்கு செல்ல வேண்டும். தேசிய தோ்வு முகமை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். தேசிய தோ்வு முகமை பரிந்துரைத்த ஆடைகளை மட்டுமே அணிந்துவர வேண்டும்.

தோ்வா்களின் அனுமதிச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தோ்வு நாளான மே 3 (ஞாயிற்றுக்கிழமை) குறித்த நேரத்தில் மட்டுமே தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவா். தோ்வா்கள் நுழைவாயிலில் முழு பரிசோதனைக்கு பிறகே தோ்வு எழுத அனுமதிக்கப்படுவாா்கள் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ. சந்தியா மற்றும் தேசிய தோ்வு முகமை அதிகாரிகள் பங்கேற்றனா்.