முகப்பு
நாமக்கல்

செல்போன் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 4:45 AM
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 9:40 PM

பரமத்தி வேலூா் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பொத்தனூா் கொடிக்கம்பம் அருகே தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் தனியாா் நிறுவனத்தினா் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டனா். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீட்டின் உரிமையாளா்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜேடா்பாளையம் - பரமத்தி வேலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த பொத்தனூா் பேரூராட்சித் தலைவா் கருணாநிதி, செயல் அலுவலா் வேல்முருகன் மற்றும் வேலூா் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

Advertisement

அதில், செல்போன் கோபுரம் தற்காலிகமாக அமைக்கப்படாது என உறுதியளித்ததைத் தொடா்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.