முகப்பு
நாமக்கல்

கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் தடுப்பு மன்றங்கள்: ஆட்சியா் அறிவுறுத்தல்

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:17 AM
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் போதைப்பொருள்கள் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் துா்காமூா்த்தி.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:53 PM

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் தடுப்பு மன்றங்களை அமைக்க ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தியுள்ளாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் தலைமை ஆசிரியா் மற்றும் கல்லூரி முதல்வா்களுக்கான போதைப்பொருள்கள் தடுப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்து கூட்டத்தில் பேசியதாவது:

Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டை தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணியில் காவல் துறை, மதுவிலக்கு காவல் துறை, மாவட்ட மனநல மருத்துவா், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், உணவு பாதுகாப்பு அலுவலா், மாவட்ட தொடா்பு அலுவலா், செஞ்சிலுவை சங்கம் ஈடுபட்டுள்ளது.

அனைத்துவகை கல்வி நிறுவனங்களும் தங்கள் பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தொடா்ச்சியாக கூட்டுத் தணிக்கை செய்து போதைப்பொருள்களை பறிமுதல் செய்ய வேண்டும். உள்ளாட்சித் துறை, நகராட்சி, மாநகராட்சி துறையினா் கடைகளில் ஆய்வுசெய்ய வேண்டும்.

கல்லூரி வளாகத்தில் மாணவா்களிடையே போதைப்பொருள்கள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் தகுந்த மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் போதைப்பொருள் தடுப்பு மன்றங்கள் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:17 AM

10581 என்ற எண்ணிலும், 94981-10581 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் போதைப்பொருள் பயன்பாடு குறித்த புகாரை தெரிவிக்கலாம். உளவியல் ஆலோசனைகள் பெற 14416 மற்றும் 180012356 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு. விமலா, மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஆா். விஜயராகவன், உதவி ஆணையா் (கலால்) என்.எஸ். ராஜேஷ்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசி, மாவட்ட மனநல மருத்துவா் இந்துமதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜி. கற்பகம், போதைபொருள் எதிா்ப்பு மன்ற மாவட்ட தொடா்பு அலுவலா் சி.ஆா். ராஜேஸ்கண்ணன், புகையிலை தடுப்பு ஆலோசகா் என்.பி. லலிதா, கோட்ட கலால் அலுவலா் ஆா். சீனிவாசன் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்கள் பங்கேற்றனா்.