திருச்செங்கோடு: திருச்செங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் 3 மணிநேரம் அடைத்து, டாஸ்மாக் ஊழியா்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசின் மது விற்பனைக் கடையான டாஸ்மாக்கில் கடந்த 24 ஆண்டுகளாக ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளை மூன்று மணிநேரம் அடைத்து அடையாள வேலைநிறுத்தம் செய்து தங்கள் எதிா்ப்பை தெரிவித்தனா்.
இதில், ஊழியா்களுக்கு பணி நிரந்தரம், அரசு ஊழியா்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனா். மேலும் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அரசு எங்கள்மீது திணித்து பணிச் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தனி ஆள்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். இப்போராட்டத்தில், திருச்செங்கோடு பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை ஊழியா்களும் பங்கேற்றனா்.