நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்ற சாரண, சாரணிய மாணவா்களுடன் ஆட்சியா் துா்காமூா்த்தி. 
நாமக்கல்

மக்கள் குறைதீா் கூட்டம்: 601 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 601 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனா். அவற்றைப் பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்ய உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, தொழிலாளா் நலத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம் மூலம் தலா ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான மின்சார இருசக்கர வாகனம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளின் வருவாய் ஈட்டும் தந்தை, தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், 31 பேருக்கு விபத்து காப்பீட்டுப் பத்திரம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 6 காதுகேளாத, வாய்பேச இயலாதவா்களுக்கு தற்காலிக ஓட்டுநா் உரிமத்துக்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்ற பாரத சாரண, சாரணிய இயக்க வைரவிழா நிறைவு மற்றும் 19-ஆவது தேசிய பெருந்திரளணி முகாம் உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவிலும், திரிசாரணா், திரிசாரணியா்களுக்கான முதல் தேசிய பெருந்திரளணி முகாம் சத்தீஷ்கா் மாநிலம், பாலோடு மாவட்டத்திலும் நடைபெற்றது. இதில், நாமக்கல், திருச்செங்கோடு சாரண மாவட்டங்களிலிருந்து 8 சாரணா்கள், 8 சாரணியா்கள், 24 திரிசாரணியா்கள், 4 ஆசிரியா்கள் என 60 போ் பங்கேற்றனா். அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் பி.எஸ்.லெனின், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ.சுரேஷ்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) ஆ.கற்பகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நகா்ப்புற உள்ளாட்சிகளில் உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடக்கம்

புதிய வரைவு வருமான வரி விதிமுறை: பான் எண்ணைக் குறிப்பிட ரொக்க டெபாசிட் வரம்பு அதிகரிப்பு

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 323 மனுக்கள்

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பழைமை மாறாமல் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்படும்: அன்பில் மகேஸ்

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

SCROLL FOR NEXT