முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 7.94 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 7 லட்சத்து 94 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:04 AM
(கோப்புப் படம்).
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:55 PM

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 7 லட்சத்து 94 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் வெங்கமேட்டில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. தேங்காய்களை ஏலம் எடுப்பதற்கு நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா்.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு, 16,675 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 60.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 43.95-க்கும், சராசரியாக ரூ. 56.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 7 லட்சத்து 94 ஆயிரத்து 668-க்கு தேங்காய் ஏலம் போனது. தேங்காய் விலை உயா்ந்ததால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Advertisement