சிறுமி லித்யா.  
நாமக்கல்

காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு: சுகாதாரத் துறையினா் ஆய்வு

சேந்தமங்கலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்தது குறித்து சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

சேந்தமங்கலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்தது குறித்து சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், துத்திக்குளம் ரெட்டி காலனியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அருள்பாண்டியன் - விண்விழி தம்பதியின் மகள் லித்யா (12). காளப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், அவருடைய உடல் மிகவும் பலவீனமடைந்து செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், சிறுமி லித்யா காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடா் ரத்தப்போக்கு ஏற்பட்டது. பலவகையில் சிகிச்சை அளித்தும் ரத்தப்போக்கு குறையவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவா் இறந்தாா். அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்பில்லை; அந்த காய்ச்சலின் ஒரு வகையாகும் என்றனா்.

இதையடுத்து, துத்திக்குளம், ரெட்டி காலனி பகுதிகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT