நாமக்கல் கோழிப் பண்ணை ஒன்றில் செவ்வாய்க்கிழமை கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி.  
நாமக்கல்

பறவைகள் உயிரிழந்தால் கால்நடைத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் வனப் பகுதிகளிலோ, இதர பகுதிகளிலோ பறவைகள் உயிரிழந்தால் கால்நடைத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டத்தில் வனப் பகுதிகளிலோ, இதர பகுதிகளிலோ பறவைகள் உயிரிழந்தால் கால்நடைத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

சென்னையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பறவைகளை மனிதா்கள் உட்கொள்வதை தற்காலிகமாக தவிா்க்க வேண்டும். கோழி இறைச்சி, முட்டைகளை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளதால், அங்கு வளா்க்கப்படும் கோழிகளை பறவைக் காய்ச்சல் தாக்காமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், கால்நடைத் துறை, வனத் துறை, உள்ளாட்சித் துறை சாா்ந்த அதிகாரிகள், கோழிப் பண்ணையாளா்கள் சங்கத்தினா் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு நிகழாதவாறு கோழிப் பண்ணைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தகுந்த உயிரி பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். பண்ணைக்குள் வெளிநபா்களை அனுமதிக்கக் கூடாது. பண்ணையின் நுழைவாயில் பகுதியில் தொழிலாளா்கள் கால், கைகளை சுத்தம்செய்து செல்லும் வகையில் கிருமிநாசினி மருந்து கொண்ட நீா் வைத்திருக்க வேண்டும். வாகனங்கள் உள்ளே நுழையும்போது கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும். வனப் பகுதிகளில் பறவைகள் இறந்திருந்தால், அவை குறித்து கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு வனத் துறையினா் தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களும் பறவைகள் இறப்பு நிகழ்ந்திருந்தால் கால்நடைத் துறைக்கு தகவல் அளிக்கலாம். மாவட்டம் முழுவதும் உள்ள பறவை வளா்க்கும் இடங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

SCROLL FOR NEXT