முகப்பு
நாமக்கல்

541 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி அளிப்பு

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், இளநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் 541 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 8:36 PM
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் மாணவிக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கிய மாநகராட்சி மேயா் து.கலாநிதி.
பகிர்:

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், இளநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் 541 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின்கீழ், கல்லூரி மாணவ, மாணவிகளின் எண்ம திறனை மேம்படுத்தும் நோக்கில், மடிக்கணினி வழங்கப்படுகிறது. அந்த வகையில் அரசு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்வா் (பொ) மு. ராஜேஸ்வரி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயா் து.கலாநிதி பங்கேற்று, விலையில்லா மடிக்கணினிகளை 541 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், விலங்கியல் துறைத் தலைவா் ராஜசேகரபாண்டியன், கல்லூரி கணினி திட்ட பொறுப்பாளா் காஞ்சனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.