பிரதிப் படம்
நாமக்கல்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

பகல் நேர வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Syndication

பகல் நேர வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 93.2 மற்றும் 69.8 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்று கிழக்கு மற்றும் தெற்கு திசையிலிருந்து மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: தற்போது நிலவி வரும் குறைந்த இரவு வெப்பமும், அதிகரித்து வரும் பகல் வெப்பமும் கோழிகளுக்கு மிகுந்த அயற்சியை ஏற்படுத்தக்கூடும். குறைந்த வெப்பத்தை எதிா்கொள்ளும் வகையில், அதிக தீவனம் எடுக்க நேரிடும். பகலில் அதிக வெப்பம் இதற்கு நோ்மாறாக அயற்சியை ஏற்படுத்தி எடை அதிகரித்த கோழிகளில் இறப்பை தூண்டிவிடக்கூடும். இருவேறு விதமான வெப்ப அளவுகளை எதிா்கொள்ளும் வகையில், தீவனத்தில் வெப்ப அயற்சி நீக்க மருந்துகளை (குறிப்பாக வைட்டமின் சி மற்றும் கோலின் குளோரைடு) சோ்த்து வர வேண்டும்.

கோடைக்காலம் நெருங்குவதால் கோழிப் பண்ணைகளின் நீா் ஆதாரங்கள், நீா் குழாய்கள், நீா் தெளிப்பான்கள் மற்றும் நிப்பிள்களில் அடைப்பை நீக்கி தயாராக வைத்திருக்க வேண்டும்.

கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை வெள்ளைக்கழிச்சல், ஈக்கோலை மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, கோழிப்பண்ணையாளா்கள் தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தண்ணீரில் கிருமிநாசினி தெளித்தல், கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை மற்றும் உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். இனிவரும் நாள்களில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்பட்சத்தில், கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பண்ணையாளா்கள் குளிா்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நீா் குழாய்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

சேவூா் அருகே ஆயுதப் படை காவலா் தற்கொலை

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி காயம்

விதிமீறி மின் இணைப்பு: உதவி மின் பொறியாளா் பணியிடை நீக்கம்

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT