வெயில் கோப்புப்படம்.
நாமக்கல்

வெயிலின் தாக்கம் 100 டிகிரியாக அதிகரிக்கும்

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல் மற்றும் இரவுநேர வெப்ப அளவுகள் முறையே 96.8 மற்றும் 73.4 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் கடந்த வாரம் மழை ஏதும் பதிவாகவில்லை.

அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாக காணப்படும். மழைக்கு தற்போது வாய்ப்பில்லை. பகல் வெப்பம் 100.4 டிகிரியாகவும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று கிழக்கு மற்றும் தெற்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ. என்றளவில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT