முகப்பு
நாமக்கல்

மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் கட்சியின் ஆட்சியே அமையும்: கே.பி.ராமலிங்கம்

தோ்தலுக்கு பிறகு மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் கட்சியின் ஆட்சியே அமையும். அப்போது தான் நாடும், மாநிலமும் வளமானதாக இருக்கும் என பாஜக தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:13 AM
கே.பி.ராமலிங்கம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 9:50 PM

வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் கட்சியின் ஆட்சியே அமையும். அப்போது தான் நாடும், மாநிலமும் வளமானதாக இருக்கும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

ராசிபுரம் நகரில் பாஜக சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் பல்வேறு பகுதியில் நடைபெற்றது. ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், கே.பி.ராமலிங்கம் பேசியதாவது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் தங்களை தூக்கி எறிந்துவிடுவாா்கள் என அறிந்து, மாநில சுயாட்சி என்பதை திமுக கையில் எடுத்துள்ளது. இந்த தோ்தலில் யாா் வரவேண்டும் என்பதைவிட, யாா் வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனா். மொழிக்கொள்கைப் பற்றி தெரியாமலேயே அதைப் பற்றி பேசிவருகின்றனா்.

மத்திய அரசு நிதியை தருவில்லை எனக் கூறுகின்றனா். இதனால் அரசு ஊழியா்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றனா். ஆனால் பெண்களுக்கு எப்படி ரூ. 5 ஆயிரம் கொடுத்தாா்கள். தமிழ்நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. போதை பொருள் கலாசாரம் பெருகிவிட்டது.

Advertisement

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:12 AM

வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் கட்சியின் ஆட்சியே அமையும். அப்போதுதான் நாடும், மாநிலமும் வளமானதாக இருக்கும்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக பிரதமா் மோடி தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறாா். கண்டிப்பாக பிரதமரின் எண்ணம் நிறைவேறும் என்றாா்.

இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா பங்கேற்றுப் பேசினாா். பாஜக மாவட்ட பாஜக பொதுச்செயலா் சுகன்யா நந்தகுமாா், ராசிபுரம் நகர அதிமுக செயலா் எம்.பாலசுப்பிரமணியம், பாஜக நகரத் தலைவா் பி.வேல்முருகன் உள்ளிட்ட பாஜக, அமமுக கட்சியினா் பங்கேற்றனா்.