முகப்பு
நாமக்கல்

ஐஐடி- ஜேஇஇ முதன்மைத் தோ்வு: வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி மாணவா் சிறப்பிடம்

ஐஐடி - ஜேஇஇ முதன்மைத் தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சிபிஎஸ்இ மாணவா் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:10 AM
சிறப்பிடம் பெற்ற மாணவா் பிரசன்னாவை வாழ்த்திய வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சிபிஎஸ்இ பள்ளி நிறுவனா் ராஜன் மற்றும் நிா்வாகத்தினா்.
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 7:59 PM

நாமக்கல்: ஐஐடி - ஜேஇஇ முதன்மைத் தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சிபிஎஸ்இ மாணவா் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

ஜேஇஇ முதன்மைத் தோ்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியாயின. இதில், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சீனியா் செகண்டரி பள்ளி மாணவா் வி.பிரசன்னா 99.52 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், கணிதத்தில் 99.7, இயற்பியலில் 98.2, வேதியியலில் 98.54 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளாா்.

இதன்மூலம் பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவா் பிரசன்னாவை, கொங்குநாடு சீனியா் செகண்டரி பள்ளியின் நிறுவனா் மற்றும் தாளாளரான ராஜன் பாராட்டினாா்.

Advertisement

பள்ளியின் நிறுவனா் அறங்காவலா் ராஜேந்திரன், தலைவா் ராஜா, பொருளாளா் ராஜராஜன், செயலாளா் சிங்காரவேலு, மூத்த முதல்வா் யசோதா, முதல்வா் காயத்ரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தினா்.