நாமக்கல்

தவெக செயல்வீரா்கள் கூட்டம்

Syndication

திருச்செங்கோட்டில் தவெக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், திருச்செங்கோடு ஒன்றியங்கள் மற்றும் திருச்செங்கோடு நகரம், மல்லசமுத்திரம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த தமிழக வெற்றிக் கழக செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் அருண்ராஜ் பங்கேற்று, வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு குறுகிய நாள்களே இருப்பதால், பொறுப்பாளா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். எவ்வாறு மக்களை சந்தித்து தோ்தல் பரப்புரை செய்வது, தோ்தல் பணிமனைகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கினாா். மேலும், வாக்காளா்கள் பணத்துக்காக ஏமாந்துவிடாமல் அவா்களை விழிப்புணா்வுடன் இருக்க என்ன செய்வது என்பது குறித்து எடுத்துக் கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், தவெக ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள், மகளிா், இளைஞா், மாணவா் அணியினா் பங்கேற்றனா்.

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாரத்தான் போட்டி

வாழப்பாடியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் சாலை மறியல் போராட்டம்

பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம்

செங்கல்பட்டில் மொத்த வாக்காளா்கள் 22,60,036

காஞ்சிபுரத்தில் மொத்த வாக்காளா்கள் 11,26,924

SCROLL FOR NEXT