முகப்பு
நாமக்கல்

காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

மல்லசமுத்திரம் அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதியதால் கீழே விழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:57 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:42 PM

மல்லசமுத்திரம் அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதியதால் கீழே விழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மல்லசமுத்திரத்தை அடுத்த மாமுண்டி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் சேட்டு (40). அதிமுக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சந்திரம்பாளையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். விழா முடிந்து வீடு திரும்பிகொண்டிருந்த போது நல்லாகவுண்டம்பாளையம் பிரிவு சாலை பகுதியில் முன்னால் சென்ற காா் திடீரென நிறுத்தப்பட்டதால், அக்காா் பின்புறம் இவரது இருசக்கர வாகனம் மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சேட்டுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் லேசான காயம் என நினைத்து அவரை மாமுண்டி கலையரங்கத்தில் படுக்கவைத்துவிட்டு சென்றுவிட்டனராம்.

Advertisement

இந்த நிலையில், சேட்டுவின் மனைவி புவனேஷ்வரி (34) அவரை பல இடங்களில் தேடினாா். பின்னா், கலையரங்கத்தில் தலையில் ரத்த காயங்களுடன் சேட்டு இறந்து கிடந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, மல்லசமுத்திரம் போலீஸாா் சேட்டுவின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இறந்த சேட்டு கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு மகன் நிதிஷ் (13), மகள் மெகன்யா (9) உள்ளனா்.