முகப்பு
நாமக்கல்

விசைத்தறி தொழிலாளி தற்கொலை: போலீஸ் விசாரணை!

விசைத்தறித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:40 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:56 PM

திருச்செங்கோடு அருகே விசைத்தறித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செங்கோட்டை அடுத்த ராஜாகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த தண்டாயுதபாணி மகன் வெங்கடாசலம் (45), விசைத்தறித் தொழிலாளி. இவா் கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:40 AM

இந்த நிலையில் வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். பின்னா், அவராகவே 108 ஆம்புலன்ஸுக்கு தொடா்பு கொண்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சோ்ந்தாா்.

Advertisement

பிறகு மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.