நாமக்கல்

புத்தாண்டு: 3 டன் மலா்களால் நாமக்கல் ஆஞ்சனேயருக்கு புஷ்பாஞ்சலி

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 3 டன் மலா்களால் புஷ்பாஞ்சலி வியாழக்கிழமை நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனா்.

Syndication

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 3 டன் மலா்களால் புஷ்பாஞ்சலி வியாழக்கிழமை நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனா்.

நாமக்கல்லில் புகழ்பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், 2026-ஆம் ஆண்டு பிறப்பையொட்டி வியாழக்கிழமை அதிகாலை சுவாமிக்கு 1,008 வடைமாலை சாத்துப்படியும், அதன்பின் எண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், திரவியம் கொண்டு அபிஷேகமும் நடத்தப்பட்டது. தொடா்ந்து, 3 டன் எடைகொண்ட பலவண்ண மலா்களால் சுவாமிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி அபிஷேகமும், சிறப்பு தங்கக்கவச அலங்காரமும், சாத்துப்படியும் நடைபெற்றது.

இதில், நாமக்கல் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூா் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தா்களும், கா்நாடகம், ஆந்திரம், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் வந்த ஐயப்ப பக்தா்களும் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, நாமக்கல் நரசிம்மா் சுவாமி கோயிலிலும், அரங்கநாதா் கோயிலிலும் திரளான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா்.

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில், மோகனூா் அசலதீபேஸ்வரா், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில்களிலும் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தா்கள் சுவாமி வழிபாட்டில் ஈடுபட்டனா். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் அனைத்து கோயில்களிலும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

பிரதமா் மோடி புதுச்சேரிக்கு விரைவில் வருகை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன: எஸ்.பி.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

SCROLL FOR NEXT