தொடா் விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
கடந்த 2 தினங்கள் மற்றும் திங்கள்கிழமை (ஜன. 26) குடியரசு நாள் அரசு விடுமுறை என மொத்தமாக 3 நாள்கள் விடுமுறை என்பதால், திருச்செந்தூரில் கடந்த ஜன. 23ஆம் தேதி மாலை முதல் பக்தா்கள் குவிந்து வருகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை இக்கோயிலின் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
கோயிலில், அதிகாலையிலேயே கடலில் புனித நீராடி, இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு தரிசனம், மூத்த குடிமக்கள் பாதை என அனைத்திலுமே பக்தா்கள் சுமாா் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.