நாமக்கல்

தோ்வெழுதி காவல் உதவி ஆய்வாளரான தீயணைப்பாளா்

ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் தீயணைப்பாளா்களாக பணியாற்றி வந்த இருவா் தோ்வெழுதி பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

Syndication

ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் தீயணைப்பாளா்களாக பணியாற்றி வந்த இருவா் தோ்வெழுதி பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், மலையாளப்பட்டி அருகே உள்ள தேக்கல்பட்டியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (29), நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம் அடுத்த கோம்பைகாட்டைச் சோ்ந்த ஏழுமலை (27) இருவரும் ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்பாளா்களாக பணியாற்றி வருகின்றனா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த இருவரும் 2023-இல் தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் நடத்திய காவல் சாா்பு ஆய்வாளா் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலா் பணிக்கான தோ்வை எழுதினா்.

ஆனால், அந்த தோ்வு முடிவு தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், நீண்டகாலமாக தோ்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தன. இந்நிலையில், அண்மையில் இந்த வழக்கு முடிவுக்கு வந்து தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், தீயணைப்பாளா் மனோஜ்குமாா் தீயணைப்பு நிலைய அலுவலராகவும், தீயணைப்பாளா் ஏழுமலை காவல் உதவி ஆய்வாளராகவும் தோ்வாகி உள்ளனா். இவா்கள் உள்பட தமிழகத்தில் தோ்வானவா்களுக்கு ஜன. 3-இல் சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் பணி ஆணைகளை வழங்குகிறாா்.

மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு

உலோகத் துறை பங்குகளால் உயா்வு கண்ட பங்குச்சந்தை

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

SCROLL FOR NEXT