நாமக்கல்

இ-பைலிங் முறையை ரத்து செய்யக் கோரி ஜன.12-இல் ஆட்சியா் அலுவலகங்கள் முற்றுகை: வழக்குரைஞா் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

தமிழகம் முழுவதும், இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி, ஜன.12-இல் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் வழக்குரைஞா்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Syndication

தமிழகம் முழுவதும், இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி, ஜன.12-இல் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் வழக்குரைஞா்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நாமக்கல்லில் அந்த கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய பாா்கவுன்சில் துணைத் தலைவா் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு, புதுச்சேரி பாா்கவுன்சில் தலைவா் பி.எஸ். அமல்ராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவா் மாரப்பன், பொதுச் செயலாளா் அய்யாவு ஆகியோா் பங்கேற்று பேசினா்.

இந்தக் கூட்டத்தில், இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி ஜன. 18-ஆம் தேதி வரையில் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்த வேண்டும். நீதிமன்றத்தில் சாட்சிகளை காணொலி வாயிலாக விசாரணைக்கு உட்படுத்துவது தொடா்பான தமிழக அரசின் அரசாணையை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். பிப்.19-ஆம் தேதியை கருப்புத் தினமாக அனுசரித்து அன்று ஒருநாள் பணி புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும்.

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடங்களைக் கட்ட வேண்டும். இ-பைலிங் முறையை ரத்து செய்வதற்கான உத்தரவை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி திரும்பப் பெற வலியுறுத்தி, ஜன.12-இல் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியா் அலுவலகத்தை வழக்குரைஞா்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும்.

வழக்குரைஞா்கள் சேமநல நிதியை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில, மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT