ராசிபுரம் காட்டூா் சாலையில் அமைந்துள்ள சிறப்பு பெற்ற ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பெளா்ணமி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, திருத்தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவா், உற்சவா் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து கோயிலை சுற்றி அம்மன் திருத்தோ் பவனி நடைபெற்றது. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல வடுகம் முனியப்பம்பாளையம் திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை தொடா்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் பக்தா்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.