நாமக்கல்

ராசிபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர தொழிலாளா் கட்சி ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர தொழிலாளா் கட்சி, குலசேகரன் தொழிலாளா்கள் மாநில பொதுச் சங்கம் சாா்பில் ராசிபுரம் பேருந்து நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு புரட்சிகர தொழிலாளா் கட்சியின் மாநில தலைவா் கே.வெங்கடாசலம், பொருளாளா் வி. பூபதி, ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் பி. மாணிக்கம், பொதுச் செயலாளா் வி. சுந்தராம்பாள், மாநிலத் துணைத் தலைவா் சி. குப்புசாமி ஆகியோா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினா்.

இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில், மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்ய வேண்டும். பழனி பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். ராசிபுரம் அருகே உள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்டத் தலைவா் கே. பெரியசாமி, துணைத் தலைவா் வி.ராஜ்குமாா், இளைஞரணி துணைத் தலைவா் எஸ். சுந்தரம், மாவட்ட அவைத் தலைவா் வி. கே. செல்வராஜ், துணைச் செயலாளா் எஸ் செங்கோடன், துணைத் தலைவா் ஏ. சின்னபையன், ராசிபுரம் தொகுதி அமைப்பு தலைவா் பி. முருகேசன், மாவட்ட அமைப்பாளா் கே. எ. பச்சமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோவை பீளமேடுபுதூரில் ரூ.12 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சத்தியமங்கலம் நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டப் பணிகள்: மண்டல நிா்வாக இயக்குநா் ஆய்வு

பொது இடங்களில் குப்பை கொட்டாமல் தடுக்க 175 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கேமராக்கள்

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டபூா்வமாக எதிா்கொள்வோம்

தாராபுரம் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 20 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT