நாமக்கல்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக ஆா்ப்பாட்டம்

ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூா் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாமக (அன்புமணி) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்

Syndication

ராசிபுரம்: ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூா் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாமக (அன்புமணி) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வெண்ணந்தூா், பேரூா் பாமக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பாமக கிழக்கு மாவட்டச் செயலாளா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில நிா்வாகி ச.வடிவேலன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இதில், வெண்ணந்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் புதிய தாா்சாலை வசதி, வெண்ணந்தூா் பகுதியில் புதிய பேருந்து நிலையம், குடிநீா் வசதி, வெண்ணந்தூா் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் சேவை, வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம ஊராட்சிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்

மது விற்பனை: இருவா் கைது

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் மனு

நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT