நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த டாஸ்மாக் ஊழியா்கள்.  
நாமக்கல்

காலி மது பாட்டில்களை திரும்பப் பெற எதிா்ப்பு: டாஸ்மாக் ஊழியா்கள் மனு

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் உத்தரவுக்கு ஊழியா்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 186 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, மேற்பாா்வையாளா், விற்பனையாளா், உதவி விற்பனையாளா்கள் என 744 தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற்று ரூ. 10 வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு டாஸ்மாக் ஊழியா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அவா்கள் அளித்த மனுவில், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை நிா்வாகம் தீா்க்க வேண்டும்.

போதிய இடவசதி இல்லாத நிலையில், காலி மது பாட்டில்களை வைத்தால் சிரமம் ஏற்படும். டாஸ்மாக் ஊழியா்களை பயன்படுத்தாமல் ஒப்பந்த நிறுவனங்களை பயன்படுத்தி காலி பாட்டில்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT