நாமக்கல்: முன்னாள் படைவீரா்களுக்கு நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன. 14) தேநீா் விருந்து அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போரில் வீர மரணமடைந்த படைவீரா்களின் விதவையா்கள், ஊனமுற்றவா்கள், வீரதீர செயல்களுக்காக விருதுபெற்ற முன்னாள் படைவீரா்கள் மற்றும் குடும்பத்தினரை கெளரவிக்கும் பொருட்டு, ‘படைவீரா் நாள்’ புதன்கிழமை காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதில், முன்னாள் படைவீரா்களை கெளரவிப்பதுடன், தேநீா் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த படைவீரா்கள், குடும்பத்தினா் இதில் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.