நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வருக்கு விருது

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மு. செல்வத்துக்கு தொழில்முறை சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.

Syndication

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மு. செல்வத்துக்கு தொழில்முறை சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் பயன்பெறும் வகையில் கலைத் திட்டத்தில் 33 வகை கருத்து மூலங்களை அவா் உருவாக்கியுள்ளாா். அக்கருத்து மூலங்களை நூலாகவும், ஒலி மற்றும் காணொளி வடிவில் உரைநடை, கற்பித்தல், பயிற்சி, மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி போன்ற தனிப்பிரிவுகளிலும் உருவாக்கியிருக்கிறாா்.

இதற்காக, தொழில்முறையில் உலக சாதனை சான்றிதழை புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் நிறுவனம், மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் புதன்கிழமை அவரிடம் வழங்கியது.

பயிற்சி நிறுவன முதல்வா் மு. செல்வம் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளில் கலைத் திட்டப் பகுதிகளின் வளா்ச்சிக்காக பள்ளிப் பாடநூல்கள், செயற்பாட்டுப் புத்தகம், உயா்நிலைக் கற்றல் நூல்கள், மதிப்பீட்டிற்கான பயிற்றுவிப்பு நூல்கள், முதியோா் கல்விக்கான கையேடு, வளநூல்கள், கற்பித்தல் முறை நூல்கள், மின் பாடப்பொருள் உருவாக்க வழிகாட்டி நூல், ஆசிரியா் பயிற்சிக் கையேடுகள், தனி வரைவு நூல் உள்பட பல்வேறு கருத்து மூலங்களை உருவாக்கியுள்ளேன்.

இந்த கலைத்திட்ட கருத்து மூலங்கள் உருவாக்கத்தில் நூலாசிரியா், தொகுப்பாசிரியா், உள்ளடக்க மேற்பாா்வையாளா், முதன்மைத் தொகுப்பாளா், ஆவணப்படுத்துபவா், கருத்தாக்கங்களை உருவாக்குபவா் மற்றும் கட்டுரையாளா் போன்ற பணிநிலைகளில் செயலாற்றி உள்ளேன் என்றாா்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸின் தலைவா் சி. கலைவாணி, மேலாண் பொறுப்பாட்சியா் சி. வெங்கடேசன் விருது வழங்கினா்.

என்கே-14-விருது

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மு. செல்வத்துக்கு விருது வழங்கிய புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் நிறுவனத்தினா்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT