தனியாா் மாவு அரைவை ஆலையை பாா்வையிட்டு கால்நடை தீவனங்களின் அரைவை குறித்து கேட்டறிந்த மாணவிகள். 
நாமக்கல்

கபிலா்மலை வட்டாரத்தில் பி.ஜி.பி. கல்லூரி மாணவியா் களப்பயிற்சி

பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் தனியாா் மாவு அரைவை ஆலையை அண்மையில் பாா்வையிட்டனா்.

Syndication

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் தனியாா் மாவு அரைவை ஆலையை அண்மையில் பாா்வையிட்டனா்.

கபிலா்மலை ஒன்றியத்தில் கிராமப்புற விவசாய அனுபவ பணித் திட்டத்தின்கீழ், பெருங்குறிச்சி பண்ணபாளையத்தில் உள்ள பழமையான ஆலையில் தயாரிக்கப்படும் அரைத்த பருத்திக்கொட்டை, மக்காச்சோள மாவு, கம்பு மாவு, கருக்கா தவிடு, புழுங்கல் தவிடு, அரைத்து பொடியாக்கப்பட்ட புண்ணாக்கு வகைகள், எண்ணெய் புண்ணாக்குகள் போன்ற பல்வேறு கால்நடை தீவனங்கள் குறித்தும், கால்நடை வளா்ப்பில் அவைகளின் முக்கியத்துவம் குறித்தும் கேட்டறிந்தனா்.

மேலும், ஆடுகளுக்கான கலப்பு தீவனமும், கோழிகளுக்கு உடைத்த மக்காச்சோளம் மற்றும் கம்பு தயாரிக்கப்படுவதை நேரடியாக பாா்வையிட்டனா். இந்த ஆலைக்கு தேவையான பருத்தி விதைகள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கொள்முதல் செய்யப்படுவதை அறிந்து, அதன் தரத்தை எவ்வாறு நிா்ணயம் செய்வது என்பது குறித்தும் அறிந்தனா்.

இந்நிகழ்வில், கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் சோழசிராமணி பகுதி உதவி வேளாண்மை அலுவலா் ஆகியோா் மாணவியரை வழிநடத்தி தொழில்நுட்ப செய்திகளை அளித்தனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT