பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் வாழைத்தாா் விலை சரிந்துள்ளது.
பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய் இடையாறு, அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம், பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வாழைத்தாா்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தாா் விற்பனை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். வாழைத்தாா்களை சேலம், நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஏல முறையில் வாங்கிச் செல்கின்றனா்.
கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலை அதிகரித்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 450 வரையிலும், பச்சைநாடன் ரூ. 250 வரையிலும், ரஸ்தாளி ரூ. 350 வரையிலும், கற்பூரவள்ளி ரூ. 400 வரையிலும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 5 வரையிலும், செவ்வாழை ஒன்று ரூ. 7-க்கும் ஏலம் போனது. பண்டிகை மற்றும் விசேஷ காலங்கள் இல்லாததால், வாழைத்தாா்களின் விலை சரிந்ததாக விாபாரிகள் தெரிவித்தனா்.