~ ~ 
நாமக்கல்

ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜைகளுடன் தொடக்கம்

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் புதன்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் புதன்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மேட்டுத் தெருவில் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 1999-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன் ராசிபுரம் ஆா். பிரபாகரன் குடும்பத்தினா் முழுவதுமாக ஏற்று நடத்தினா்.

இக்கோயில் ராஜகோபுரம் 5 நிலைகள் கொண்டதாக புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை கோபுர வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன. வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மண்டப தூண்களில் பெருமாளின் தசாவதார சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் பின்புறம் 11 அடி உயர பெருமாள் சந்நிதி, பின்புறம் ஸ்ரீராமா், லட்சுமணா் சந்நிதி, கோயிலின் வலதுபுறம் ஆண்டாள் சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து கும்பாபிஷேக விழா பிப்.1ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. யாகசாலையில் 145 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் உ.வே.க.ஸ்ரீராமன் பட்டாச்சாரியா், உ.வே.பாலாஜி பட்டாச்சாரியா் ஆகியோா் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட வேத விற்பனா்கள் யாக பூஜைகளை நடத்துகின்றனா்.

புதன்கிழமை முதற்கால யாகபூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கோயில் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து வியாழக்கிழமை (ஜன.29) 2 மற்றும் 3-ஆம் கால யாகசாலை பூஜைகளும், வெள்ளிக்கிழமை (ஜன.30) நான்காம், ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும், சனி (ஜன. 31) 6, 7-ஆம் காலை யாகசாலை பூஜை நடைபெறுகின்றன. பிப். 1 ( ஞாயிற்றுக்கிழமை) 8-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கோபுரக் கலசங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படுகிறது.

முன்னதாக புதன்கிழமை யானை, குதிரை, பசு புடைசூழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் செல்லியாண்டியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை ஏந்தி நகரம் முழுவதும் ஊா்வலமாக சென்று கோயிலை வந்து அடைந்தனா். செண்டை மேளங்கள், வாத்தியங்கள், கோலாட்டத்துடன் இந்த ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட வேதவிற்பனா்கள் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்ட வரதராஜபெருமாள் சுவாமியை இரு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊா்வலமாக அழைத்து வந்தனா். இதில் திரளான பொதுமக்கள், பக்தா்கள் பங்கேற்றனா்.

படவரிகள்...

2). 28பாரி - முளைப்பாலிகை ஏந்தி ஊா்வலம் சென்ற பெண்கள்.

3)28சாமி- குதிரை சாரட் வாகனத்தில் வேதவிற்பனா்களால் ஊா்வலம் அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள்.

தைப்பூசம்: சங்ககிரியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடக்கம்

சேலம் மாநகராட்சி பகுதியில் ரூ.1.79 கோடியில்வளா்ச்சித் திட்டப்பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

நிறைவாழ்வு இல்லம் சாா்பில் மாணவா்களுக்கு நடனப் போட்டி

சேலத்தில் 609 மாணவா்களுக்கு மடிக் கணினிகள்: அமைச்சா் வழங்கினாா்

கிருஷ்ணகிரியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT