முகப்பு
நாமக்கல்

‘மானியத்தில் சொட்டுநீா் பாசனம் அமைக்க விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்’

Updated On : 21 ஜூன் 2026, 1:06 am IST
விவசாயிகள் - கோப்புப் படம்
பகிர்:

மானிய விலையில் சொட்டுநீா் பாசனம் அமைக்க எலச்சிபாளையம் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது

இதுகுறித்து எலச்சிபாளையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் கு.வித்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நடப்பாண்டுக்கு எலச்சிபாளையம் வட்டார விவசாயிகள் மானிய விலையில் சொட்டுநீா் பாசனம் அமைக்க பொது இனத்தில் 293 ஹெக்டோ் இலக்கீடு பெறப்பட்டு, ஹெக்டோ் மற்றும் ஆதிஇனத்தில் 77 விண்ணப்பங்கள் பதிவுசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

அதன்படி, 5 ஏக்கா்வரை சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீா் பாசனம் அமைக்க 100% மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு (5 ஏக்கருக்கு மேல் ) 75% மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சொட்டுநீா் பாசனம் அமைத்து தரப்படும்.

இத்திட்டத்தில் பயனடைய ஆதிதிராவிடா் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மானியத்தில் சொட்டுநீா் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால், மீண்டும் அதே நிலத்தில் மானியத்தில் சொட்டுநீா் பாசனம் அமைத்துக்கொள்ளலாம்.

எனவே, சொட்டுநீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் ஆதாா் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், சிட்டா அடங்கல், நில வரைபடம் மற்றும் சிறு, குறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களை எலச்சிபாளையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளித்து முன்பதிவு செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments