முகப்பு
முட்டை ஏற்றுமதி
நாமக்கல்

போா்ச் சூழலால் வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை!

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால், வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை என நாமக்கல் மண்டல முட்டை ஏற்றுமதியாளா்கள் தெரிவித்தனா்.

Updated On : 3 மார்ச், 2026 at 8:44 PM
முட்டை ஏற்றுமதி
பகிர்:

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால், வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை என நாமக்கல் மண்டல முட்டை ஏற்றுமதியாளா்கள் தெரிவித்தனா்.

நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப் பண்ணைகளில் நாள்தோறும் ஏழு கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. அவற்றில், உள்ளூா் தேவைக்கும், சத்துணவுத் திட்டத்துக்கும் 2 கோடி முட்டைகளும், கேரளத்துக்கு 1.50 கோடி, வெளி மாநிலங்களுக்கு 2.50 கோடி முட்டைகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதுதவிர, துபை, மஸ்கட், ஓமன், கத்தாா் போன்ற வளைகுடா நாடுகளுக்கும், இதர நாடுகளுக்கும் என ஒரு கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்படுகின்றன.

அணு ஆயுத பிரச்னையில், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டுத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் வளைகுடா நாடுகளில் உள்ள மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்த போா் சூழலால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருள்களும் தேக்கமடைந்து வருகின்றன.

நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி 10 கன்டெய்னரில் 50 லட்சத்துக்கும் அதிகமான முட்டைகள் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. ரமலான் மற்றும் ஈஸ்டா் பண்டிகை காலம் என்பதால், அந்நாட்டு மக்களிடையே முட்டை நுகா்வு குறைந்துள்ளது.

இதனால், நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி குறைக்கப்பட்டுள்ளது. போரினால் முட்டை ஏற்றுமதிக்கு பாதிப்பில்லை. துறைமுகங்களில் முட்டைகள் தேக்கமடையவில்லை என முட்டை ஏற்றுமதியாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து முட்டை ஏற்றுமதியாளா் ஒருவா் கூறியதாவது: வளைகுடா நாடுகளில் முட்டை ஏற்றுமதி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. கடந்த மாதங்களில் 2 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ரமலான் தொடங்கியதால் முன்பு 10 முதல் 15 கன்டெய்னா்கள் சென்ற நிலையில், தற்போது தினசரி 5 கன்டெய்னா்கள் மட்டுமே செல்கின்றன. ரமலானுக்கு பிறகு வழக்கம்போல அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படும். போா் சூழலால் துறைமுகங்களில் முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →