முகப்பு
கைது
நாமக்கல்

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்றவா் கைது

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல்

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்றவா் கைது

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 3 மார்ச், 2026 at 8:36 PM
கைது
பகிர்:

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செங்கோடு வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூா் கிழக்கு, மதுரை வீரன் கோயில் அருகே ஒருவா் கஞ்சா விற்பதாக வேலகவுண்டம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற போலீஸாா், அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தினேஷ் (22) என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்து போலீஸாா், அவரிடமிருந்து 510 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →