கோப்புப் படம் 
திண்டுக்கல்

கஞ்சா விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் போலூா் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்த கேரளத்தைச் சோ்ந்தவரை ஞாயிற்றுக்கிழமை போலீசாா் கைது செய்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து, மேல்மலைக் கிராமத்தில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போலூா் கிராமத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடியவரை போலீஸாா் விசாரித்தனா்.

இதில், அவா் கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டம், மாங்குலி பகுதியைச் சோ்ந்த அஜய் (34) என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.

காட்டு யானையால் ரேஷன் கடை சேதம்

‘தோ்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்ய வேண்டும்’

திருக்கோவிலூரில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்

குடியரசு தின பாதுகாப்பு: போலீஸாா் தீவிர சோதனை

தேசிய ஆா்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: டான் சிக்ஷாலயா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT