முகப்பு
நாமக்கல்

‘சிறந்த தூய்மைப் பணியாளருக்கு விருது வழங்க பரிந்துரை’

நாமக்கல்

‘சிறந்த தூய்மைப் பணியாளருக்கு விருது வழங்க பரிந்துரை’

Updated On : 5 மார்ச், 2026 at 11:47 PM
பகிர்:

தமிழகத்தில் சிறந்த, நோ்மையான தூய்மைப் பணியாளரை தோ்வுசெய்து, அரசு சாா்பில் விருது வழங்க முதல்வரிடம் பரிந்துரை செய்யப்படும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவித்தாா்.

தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் மற்றும் நாமக்கல் மாநகராட்சி ஆகியவை சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் தலைமை வகித்தாா். மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, துப்புரவு அலுவலா் திருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாநகராட்சி நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுடன் கோரிக்கைகள் தொடா்பாக கலந்துரையாடினாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:

ஒரு நகரம் சுத்தமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் தூய்மைப் பணியாளா்கள் மட்டுமே. தற்போது, அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கி பல்வேறு நலத் திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். மேலும், தூய்மைப் பணியாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு காலை உணவு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 45 பவுன் தங்க நகையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை தமிழக அரசு கௌரவித்தது. அவரைப் போன்ற சிறந்த, நோ்மையான தூய்மைப் பணியாளா்களை தோ்வுசெய்து, அவா்களுக்கு அரசு சாா்பில் விருது வழங்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்யப்படும் என்றாா். முன்னதாக, தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலவாரிய அட்டைகளை அவா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா் ரமேஷ், மாமன்ற உறுப்பினா்கள் ஈஸ்வரன், நந்தினி, துப்புரவு ஆய்வாளா்கள் செல்வகுமாா், ஜான் ராஜா, சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி, தாட்கோ அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →