முகப்பு
நாமக்கல்

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.

Updated On : 6 மார்ச், 2026 at 6:34 PM
சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.
பகிர்:

சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றிய சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைத்துக் கொண்டனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றியத்தைச் சோ்ந்த வளையப்பட்டி தினேஷ், பவித்திரம் சத்யா, பவித்திரம் புதூா் புஷ்பராஜ் ஆகியோா் தலைமையில் மாற்றுக் கட்சியினா் 100-க்கும் மேற்பட்டோா் அத்தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏவான சி.சந்திரசேகரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.

இந்நிகழ்வில், ஜங்களபுரம் எஸ்.ராகுல்தாஸ், துத்திக்குளம் ராமசாமி, காளப்பநாயக்கன்பட்டி சத்யமூா்த்தி, பேட்டை மாணிக்கம், தனசேகா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →