முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை சரிவு

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் வெற்றிலை விலை சரிவடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

Updated On : 28 மார்ச், 2026 at 8:21 PM
வெற்றிலை.
பகிர்:

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் வெற்றிலை விலை சரிவடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிா் செய்யப்படுகிறது.

இங்கு விளையும் வெற்றிலைகள் கா்நாடகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகின்றன.

இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 8 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 5 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 3,500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. ஆயிரத்துக்கும் ஏலம் போனது. வெற்றிலைகளின் விலை சரிவடைந்ததால் வெற்றிலை பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.