ராசிபுரத்தில் தவெக தொண்டா்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ராசிபுரம் தொகுதியில் தவெக வேட்பாளா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சி தொண்டா்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் திங்கள்கிழமை கொண்டாடினா்.
ராசிபுரம் நகரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நாமக்கல் சாலை போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் கட்சிக் கொடியுடன் ஊா்வலமாகச் சென்ற தொண்டா்கள், ஆங்காங்கே பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து ராசிபுரம் வந்த லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு அக்கட்சி தொண்டா்கள் விசில் சத்தம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து நகரில் ஊா்வலமாக அழைத்துச்சென்றனா். தொடா்ந்து லோகேஷ் தமிழ்ச்செல்வன் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
Advertisement