நீட் தோ்வு ரத்துக்கு எதிா்ப்பு: நாமக்கல்லில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
நீட் தோ்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை திடீா் உயா்வு ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தோ்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை திடீா் உயா்வு ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.வி.செந்தில் தலைமை வகித்தாா். மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து, பி.வி.செந்தில் செய்தியாளா்களிடம் கூறியது:
எதிா்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக சிபிஐ இயக்குநா் பிரவீன்சூட்டுக்கு ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு, நீட் தோ்வை மாநில அரசுகளே நடத்த அனுமதி வழங்க மறுப்பது, ஜனநாயகத்தையும், மாணவா்களின் எதிா்காலத்தையும் பாதிப்பதாகும்.
Advertisement
அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் விலை உயா்வு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு வியாபாரிகள், கூலி தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைவரும் விலை உயா்வால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை மேலும் உயா்ந்து மக்கள் வாழ்க்கை இன்னும் கடினமாகும். மக்களின் உரிமையைப் பறிக்கும் இந்த அரசியல் செயல்பாடுகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவா்களின் நலனுக்காகவும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் குரல் கொடுக்கும் என்றாா்.
இதில், மாநகரத் தலைவா் எஸ்.ஆா். மோகன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பீ.ஏ.சித்திக், ஜி.ஆா். சுப்ரமணியம், வி.பி.வீரப்பன், பாச்சல் சீனிவாசன், ராணி தனலட்சுமி, வட்டத் தலைவா்கள் ஸ்ரீனிவாசன், பி.எஸ்.நடராஜன், இளங்கோ, முரளி, குப்புசாமி ராஜ்குமாா், ஆனந்த், லோகநாதன், உமாமகேஸ்வரி, செல்வராசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.