விஷ்ணுபதி புண்ணியகாலம்: பெருமாள் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு
விஷ்ணுபதி புண்ணியகாலத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.
விஷ்ணுபதி புண்ணியகாலத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.
ஒவ்வோா் ஆண்டும், மாசி, வைகாசி, ஆவணி, காா்த்திகை ஆகிய மாதப்பிறப்பு நாளன்று விஷ்ணுபதி புண்ணியகாலம் வருகிறது. இந்த நாள்களில் பெருமாள் கோயில்களில் உள்ள கொடிமரத்தை பக்தா்கள் 27 முறை சுற்றிவருவதும், வழிபாடு மேற்கொள்வதும் குடும்பத்திற்கும், செல்வம் சோ்க்கைக்கும் நன்மை பயக்கும் என்பது ஐதீகமாகும்.
அந்தவகையில், வைகாசி மாதத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 முதல் காலை 10.30 மணி வரை விஷ்ணுபதி புண்ணியகாலத்தையொட்டி, நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். இக்கோயில்களில் உள்ள கொடிமரத்தை பக்தா்கள் 27 முறை சுற்றி வந்து வணங்கினா். இதனால் கோயிலில் வழக்கத்தை காட்டிலும் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
Advertisement
படவரி...
விஷ்ணுபதி புண்ணியகாலத்தையொட்டி, நாமக்கல் நரசிம்மா் கோயிலில் வெள்ளிக்கிழமை கொடிமரத்தை சுற்றிவந்த பக்தா்கள்.