முகப்பு
சேலம்

அன்னதானப்பட்டி அருகே அழுத்தம் தாங்காமல் வெடித்துச் சிதறிய ஆழ்துளை கிணறுகள்

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் புதன்கிழமை அழுத்தம் தாங்காமல்

Updated On : 18 அக்டோபர், 2012 at 2:39 PM
பகிர்:

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் புதன்கிழமை அழுத்தம் தாங்காமல் ஆழ்துளை கிணறுகள் வெடித்துச் சிதறியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 அன்னதானப்பட்டி பாண்டு நகரைச் சேர்ந்தவர் தயாபரண் (39). தனியார் நிறுவன மேலாளர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு கட்டி குடியேறி உள்ளார். இவர் தனது வீட்டின் ஒரு அறையில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். கிணற்றின் மீது கிரானைட் கல் பதித்துள்ளார்.

 இந்த நிலையில் புதன்கிழமை பகலில் தயாபரண் அமைத்திருந்த போர்வெல் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதைத் தொடர்ந்து அதில் இருந்து தண்ணீர் பீறிட்டு அறை முழுவதும் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

Advertisement

 இதைப் போலவே அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரின் ஆழ்துளை கிணறும் வெடித்து அதில் அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் பல மீட்டர்கள் தூரம் வெளியேறி விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக 5 ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார்.

 சக்திவேலு அமைத்த ஆழ்துளை கிணறு தயாபரண் அமைத்திருந்த கிணற்றின் ஊற்றிலேயே தோண்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சக்திவேலு வீட்டில் கிணறு தோண்டும்போது கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் விளைவாலேயே தயாபரண் உள்ளிட்ட இருவரது வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் வெடித்துச் சிதறியிருப்பது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.