சேலம்

தமிழகம் குஜராத்தை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்: ஜி.கே.மணி பேச்சு

மின்சார உற்பத்தியில் தமிழகம் குஜராத் மாநிலத்தை முன்மாதிரியாகக்

க. தங்கராஜா

மின்சார உற்பத்தியில் தமிழகம் குஜராத் மாநிலத்தை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

 மின்வெட்டைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தைத் தொடங்கி வைத்து கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பேசியது:

 தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மின்வெட்டைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி 2 நாள் போராட்டம் நடத்துகிறது. சென்னையைத் தவிர எல்லா மாவட்டங்களிலும் 16 முதல் 18 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் தமிழகமே இருண்ட மாநிலமாகக் காட்சி அளிக்கிறது.

 மின்வெட்டு காரணமாக பொதுமக்கள், குழந்தைகள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். கொசுக் கடியால் டெங்கு பரவி வருகிறது. தொழில், உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மின்வெட்டை சரி செய்வோம் என்று ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் 18 மாதங்களாகியும் மின்வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை.

 தமிழகத்தில் தினசரி 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேட்டூர், வட சென்னை உள்ளிட்ட புதிய திட்டங்கள் மூலம் மார்ச் மாதத்திலேயே மின் உற்பத்தி தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது செயல்படும் அனல் மின் நிலையங்களிலேயே சீரான உற்பத்தி நடைபெறவில்லை. கடந்த திமுக ஆட்சியிலும், தற்போதைய அதிமுக ஆட்சியிலும் மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.

 குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் 20 சதவீதம் மின்சார பற்றாக்குறை நிலவியது. ஆனால் 2010-ம் ஆண்டுக்குள் பல்வேறு திட்டங்கள் மூலம் தேவைக்கு அதிகமாக மின்சார உற்பத்தி செய்யப்பட்டு அண்டை மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்சார மேலாண்மையில் குஜராத் மாநிலத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்றார் ஜி.கே.மணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT