சேலம்

ஓமலூர் பகுதியில் கனிம வள திருட்டு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

ஓமலூர் பகுதியில் தொடரும் கனிமவளக் கடத்தலை முற்றிலும் ஒழிக்க கடத்தல்காரர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமலூர் வட்டாரப் பகுதிகளில் கிரானைட் கற்கள், கருங்கற்கள், வெள்ளை மற்றும் பச்சைக் கற்கள், செம்மண், நுரம்பு மண் போன்ற கனிம வளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இங்குள்ள வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் அதிகளவு வெள்ளைக்கல் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்தக் கற்கள், டைல்ஸ் மற்றும் மார்பில் உள்ளிட்டவைகள் தயாரிக்கப் பயன்படுவதால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் வெள்ளைக்கற்கள் அதிகளவில் வெட்டி கடத்தப்படுகிறது.
இதே போன்று காடையாம்பட்டி பகுதியில் கிரானைட் கற்கள், கருங்கற்கள், ஓமலூர் பகுதியில் அதிக அளவில் செம்மண்ணும் கிடைப்பதால் தினம்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனிமப் பொருள்களை கடத்தும் வாகனங்களை வருவாய்த் துறை மற்றும் கனிம வளத் துறையினர் பிடித்து பறிமுதல் செய்கின்றனர். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை கடத்தல்காரர்கள் வாங்கிச் செல்ல முன்வராததால் மாதக் கணக்கில் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஓமலூர் பகுதியில் தொடரும் கனிமவளக் கடத்தலை முற்றிலும் ஒழிக்க கடத்தல்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT