சேலம்

மாநகராட்சிப் பணியாளர்களின் நிர்வாக சீர்திருத்தம் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

DIN

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் குமார் ஜெயந்த் தலைமையில் சேலம் மாநகராட்சிப் பணியாளர்களின் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சேலம் மாநகர நிர்வாக செயல்பாடுகள், முதல்வரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட கடிதங்கள் தொடர்பான நடவடிக்கைகள், சட்டப்பேரவையின் உறுதிமொழிக் குழு, மதிப்பீட்டுக் குழு ஆகியவற்றின் பரிந்துரைகள் மற்றும் சட்டப்பேரவையிலிருந்து பெறப்பட்ட வினாக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் நிலுவையில் உள்ள பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும், நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.
சேலம் மாநகராட்சியின் வருவாயை உயர்த்துவது குறித்தும், ஓய்வுபெற்ற பணியாளர்களின் நலன்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாநகராட்சி தனி அலுவலரும், ஆணையருமான க.இரா.செல்வராஜ், கண்காணிப்புப் பொறியாளர் கி.ரவி, செயற்பொறியாளர்கள் அ.அசோகன், ஜி. காமராஜ், பி.மோகன், மாநகர நல அலுவலர் ஆர்.செல்வகுமார், உதவி ஆணையர்கள் ப.ரமேஷ்பாபு, ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், திலகா, மு.கணேசன், க.ராஜா, நா.சத்யநாராயணன், டி.ரங்கநாயகி, உதவி செயற்பொறியாளர்கள் எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி, எம்.செல்வராஜ், ஆர்.செந்தில்குமார், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT