சேலம்

எடப்பாடியில் பேருந்துகள் ஆய்வு

தினமணி

எடப்பாடி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
 இதில், தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள், வண்ண விளக்குகள், ஆடியோ, வீடியோ அமைப்புகள் அகற்றப்பட்டன. மேலும், உரிய வழித்தடங்களில் இயக்கப்படாத பேருந்துகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
 சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து தலைமையில் நடைபெற்ற ஆய்வில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் விஸ்வநாதன், தனபால், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, இப்பகுதியில் உரிய அனுமதி இன்றி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்படும் கனரக வாகனங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT