சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

தினமணி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 2,566 கன அடியாகச் சரிந்துள்ளது.
 கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 3,501 கன அடியாக அதிகரித்தது.
 நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழையளவு குறைந்த காரணத்தால் ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 2,566 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 5.64 டி.எம்.சி.யாக இருந்தது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 24.88 அடியாக உயர்ந்துள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT