சேலம்

மேட்டூர் காவிரி ஆற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றக் கோரிக்கை

தினமணி

மேட்டூர் காவிரி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 ஆடிப்பெருக்கு மற்றும் தலையாடி பண்டிகையையொட்டி மேட்டூர் காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் புனிதநீராடுவது வழக்கம். காவேரி பாலம், அனல் மின் நிலையப் பாலம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நீராடும் இடங்களில் ஏராளமான ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் நீராட முடியாத நிலை உருவாகி உள்ளது. பொதுமக்கள் இப்பகுதியில் நீராடினால் ஆகாயத் தாமரைகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுப்பணித் துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT