சேலம்

மூக்கனேரியில் வண்டல் மண் அள்ளும் பணி: எம்.பி. ஆய்வு

DIN

சேலம் மூக்கனேரியில் வண்டல் மண் அள்ளும் பணியை அதிமுக எம்.பி. எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் வண்டல் மண் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை அதிமுக எம்.பி. வி.பன்னீர்செல்வம், சேலம் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  மேலும் வண்டல் மண் முறையாக அள்ளப்படுகிறதா என்பது குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்போது விவசாயிகள் கூறுகையில், சுமார் 57 ஏக்கர் பரப்பளவு கொண்ட மூக்கனேரி மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகின்றன.
இதில் 25 விவசாயிகளுக்கு ஏரிக்குள் நீர்ப்பிடிப்புப் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வண்டல் மண் அள்ளி நீர்ப்பிடிப்பு பட்டா பகுதியில் மேடாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏரியின் பரப்பளவு குறைந்துவிடும் என்றனர்.
இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என எம்.பி. வி.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT