சேலம்

சோனா கல்வி குழுமம் சார்பில் மகளிர் தின விழா

தினமணி

சோனா கல்வி குழுமம் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
 சோனா கல்வி குழுமம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கல்லூரித் தலைவர் வள்ளியப்பா, சீதா வள்ளியப்பா ஆகியோர் தலைமை வகித்தனர்.
 இதில் கல்லூரி முதல்வர்கள் உஷா, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 விழாவில் பெங்களூரு எம்.எஸ்.ராமையா தொழில்நுட்பக் கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை தலைவர் சவிதா ராணி மற்றும் சென்னை சென்ஷா டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
 இதைத்தொடர்ந்து சீதா வள்ளியப்பா பேசுகையில், அகில இந்திய அளவில் தொழில்நுட்பக் கல்வியை பெண்களும் படிக்கலாம் என்ற வகையில் முதன் முதலாக இருபாலர் தொழில்நுட்பக் கல்வி தியாகராஜர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாணவிகளின் திறமைகளை அறிந்து அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல சாதனைகளை புரிந்து வருவதற்கு சோனா கல்வி குழுமங்கள் உதவிகரமாக இருக்கின்றன என்றார். விழாவில் கல்லூரி இயக்குநர் கௌசிக், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT