சேலம்

எடப்பாடி கிழக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தினமணி

எடப்பாடி கிழக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டம் எடப்பாடி கவுண்டம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 எடப்பாடி பகுதியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 கிழக்குப் பகுதி உற்பத்தியாளர் சங்கத்தின் புதிய தலைவராக கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளங்கோ, செயலராக சி.எஸ்.ராஜி, பொருளாராக ஜெயப் பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் புதிய தலைவர் இளங்கோ உறுப்பினர்கள் மத்தியில் பேசியது:
 எடப்பாடி கிழக்குப் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திடீர் நூல்விலை உயர்வு உள்ளிட்ட உறுப்பினர்களின் அனைத்துப் பிரச்னைகளையும் சங்கத்தின் மற்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதுடன் அதற்கான நிரந்தர தீர்வையும் பெற்றுத் தர, சங்கத்தின் புதிய நிர்வாகிகள் குழு முனைப்புடன் செயல்படும் என்றார். இந்த நிகழ்சியில் சங்க நிர்வாகிகள் நாகராஜ், லோகநாதன், ஜெமினி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT